உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

பஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

திருத்தணி:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசு பேருந்து தடம் எண் டி.48 நேற்று முன்தினம் திருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் பிரபாகரன், 40, ஓட்டி சென்றார். இ.என்.கண்டிகை அருகே பேருந்து சென்றபோது, டூ-- - வீலரில் வந்த வாலிபர் ஒருவர் முந்தி செல்ல முயன்றார். அரசு பேருந்து டிரைவர், வழி விடாத ஆத்திரத்தில் அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பேருந்தில் ஏறி டிரைவர் பிரபாகரனை தாக்கி விட்டு தப்பிச் சென்றார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன், 21 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை