மேலும் செய்திகள்
வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது
05-May-2025
மீஞ்சூர், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மலர் செல்வி, எஸ்.ஐ., ஜெகன்னாதன் தலைமையிலான போலீசார், நேற்று மாலை சோழவரம் அடுத்த மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அங்கு, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த வாலிபரை விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.இதையடுத்து, அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த விபின் பிரகாஷ், 26, என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.இதை தொடர்ந்து, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், பிரகாஷ கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
05-May-2025