உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூவம் ஆற்றில் மணல் திருட்டு வாலிபர் கைது

கூவம் ஆற்றில் மணல் திருட்டு வாலிபர் கைது

கடம்பத்துார்:கடம்பத்துார் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் கூவம் ஆற்றில் கடம்பத்துார் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூவம் ஆற்றில் டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் மணல் திருடிக் கொண்டிருந்த மூவர் போலீசாரைக் கண்டதும் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சீனிவாசன், 23 எனவும் சரக்கு வாகன ஓட்டுனர் எனவும் தெரிய வந்தது.இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார் சீனிவாசனை கைது செய்து டாடா ஏஸ் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ