உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வியாபாரி கொலை வழக்கில் வாலிபர் கைது

வியாபாரி கொலை வழக்கில் வாலிபர் கைது

மீஞ்சூர்:மீஞ்சூர் அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சையது உசேன், 40; வியாபாரி. இவர் கடந்த, 14ம் தேதி இரவு, விற்பனை முடிந்து கடையை பூட்டிக்கொண்டு, மீஞ்சூர் பெருமாள் கோவில் தெரு வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்றபோது, எதிரில் பைக்கில் வந்த வாலிபருடன் தகராறு ஏற்பட்டது.அப்போது பைக்கில் இருந்த வாலிபர் சையது உசேனை கல்லால் தாக்கிவிட்டு தப்பினார். பலத்த காயம் அடைந்த சையது உசேன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த, 16ம் தேதி நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.அதையடுத்து மீஞ்சூர் போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து, சையது உசேனை தாக்கிய வாலிபரை தேடி வந்தனர். சிசிடிவி., க்களை ஆய்வு செய்து, மீஞ்சூர் புதுப்பேடு பகுதியை சேர்ந்த, பிளம்பர் பணிசெய்யும் ஹரிஷ், 22, என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.அதில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த ஹரிஷ், பைக்கில் இருந்து கீழே விழுந்து உள்ளார். அவரை துாக்குவதற்கு சென்ற சையது உசேனை, ஹரிஷ் கல்லால் தாக்கியது விசாரணையில் தெரிந்தது. அதையடுத்து போலீசார் ஹரிஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி