உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன், 30. திருவள்ளூரில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் சென்னை செல்ல திருவாலங்காடு ரயில் நிலையம் வந்தார். நான்காவது நடைமேடையில் இருந்தவர் சிறுநீர் கழிக்க தண்டவாளத்தை கடந்து சென்றார்.அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அர்ஜூன் உயிரிழந்தார்.அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !