மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
06-Jun-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன்,30. காக்களூர் எஸ்டேட்டில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் ஒப்பந்த ஊழியராக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்கு செல்ல புட்லுார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், அரவிந்தன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
06-Jun-2025