உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

 ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

பொன்னேரி: தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்தார். பொன்னேரி ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், முதல் நடைமேடையில் இருந்து, இரண்டாவது நடைமேடைக்கு செல்ல அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து டில்லி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்தார். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், வாலிபரின் சடலத்தை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ