உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

திருத்தணி, சென்னை- - -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடி அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து, அலுமேலுமங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார், வாலிபர் உடலை மீட்டு, வழக்கு பதிந்து, இறந்தவரின் பெயர், விலாசம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ