உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

மப்பேடு: மப்பேடில் உள்ள வாட்டர் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்த வாலிபர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு மகன் ஜெயகுமார், 18. இவர், மப்பேடு பகுதியில் எச்.என்., என்ற வாகனங்கள் கழுவும், வாட்டர் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் பணியிலிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்தவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ