உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை

நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை

பொன்னேரி:பொன்னேரி அருகே நள்ளிரவில், வாலிபரை வெட்டி கொலை செய்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர் பொன்னேரி அரசு பேருந்து பணிமனையின் எதிர்புறத்தில் ஆரணி ஆறும், அதன் அருகில், நகராட்சி சுடுகாடும் உள்ளது. நேற்று காலை, மேற்கண்ட பகுதியில் வாலிபர் ஒருவர், வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்ற ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டதில், அவர், பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த விமல்ராஜ், 27, என்பதும், கட்டுமான பணிகளில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. தொடர் விசாரணையில், விமல்ராஜ், தன் நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பால் கொலை செய்யப்படிருப்பது தெரிந்தது. இது தொடர்பாக, மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ---------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை