உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவனை கடத்தி சென்று தாக்கிய வாலிபர்கள் கைது

மாணவனை கடத்தி சென்று தாக்கிய வாலிபர்கள் கைது

பள்ளிப்பட்டு:பள்ளி மாணவரை, ஆந்திராவிற்கு கடத்தி சென்று தாக்கிய வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு அடுத்த கல்லாமேடு காலனியைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ், 22, சிம்பு, 21. பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவியிடம் சந்தோஷ் பேச முயன்றதால், ஏற்கனவே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியின் தம்பி, பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம், அப்பள்ளிக்கு சென்ற சந்தோஷ் மற்றும் சுந்தர், மாணவனை பைக்கில் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி நீர்த்தேக்கம் பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்குள்ள வனப்பகுதியில் வைத்து தாக்கியுள்ளனர். அதை மொபைல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். பின், பள்ளிப்பட்டிற்கு அழைத்து வந்து, நகரி கூட்டுச்சாலையில் இறக்கி விட்டு சென்றனர். இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரித்த போலீசார், சந்தோஷ் மற்றும் சுந்தரை கைது செய்து, திருத்தணி கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை