வணிக வரி ஆபீசில் ரூ.1.43 லட்சம் பறிமுதல்
திருவாரூர்:திருவாரூர் துர்காலய ரோட்டில், வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவலகம் உள்ளது. இங்கு, இணை ஆணையராக அருணபாரதி, 48, என்பவர், உள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த அலுவலகத்தில் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது, இணை ஆணையர் மேஜையில், 1.43 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்தது என தெரிவித்தார். ஆனால், அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, 1.43 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.