மேலும் செய்திகள்
குழந்தை கொலை வழக்கு; இளம்பெண்ணுக்கு சிறை
18-Apr-2025
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, தேவங்குடியில், பெரியம்மா வீட்டில் வசித்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார், 25, என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ராஜ்குமார் அவரிடம் தவறாக நடந்துள்ளார். கர்ப்பமடைந்த சிறுமிக்கு நேற்று முன்தினம், திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சிறுமி புகாரின்படி, மன்னார்குடி மகளிர் போலீசார், ராஜ்குமார் மீது போக்சோவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
18-Apr-2025