சிறுமிக்கு தொந்தரவு; சிறுவனுக்கு போக்சோ
திருவாரூர்: சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, முனியூரை சேர்ந்த, 12 வயது சிறுமி, பக்கத்து வீட்டு மாடியில் குழந்தைகளுடன், நவ., 21ல் விளையாடினார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுவன், அங்கு வந்துள்ளார். அவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். சிறுமியின் பெற்றோர் புகார்படி, நன்னிலம் மகளிர் போலீசார், சிறுவனை போக்சோவில், நேற்று கைது செய்தனர்.