சாலை விபத்தில் கல்லுாரி மாணவர் பலி
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே, மேம்பால கட்டையில் மோதிய பொறியியல் கல்லுாரி மாணவர் இறந்தார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் புகழ்ராஜ், 22, பொறியியல் கல்லுாரி மாணவர். இவர், நேற்று முன்தினம் இரவு, நீடாமங்கலத்தில் இருந்து, வையகளத்துாருக்கு டூ - வீலரில் சென்று கொண்டிருந்தார். நீடாமங்கலம் மேம்பாலத்தில் செல்லும் போது, நிலை தடுமாறி, பாலத்தின் கட்டையில் மோதி கீழே விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள், அவரை நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.