உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / அரசுக்கு எதிராக கருத்து ஆசிரியர் சஸ்பெண்ட்

அரசுக்கு எதிராக கருத்து ஆசிரியர் சஸ்பெண்ட்

திருவாரூர்,:அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்ட பள்ளி ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், கர்ணாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஐந்து ஆண்டுகளாக, ரமேஷ் என்பவர் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தொடங்கிய, 'வாட்ஸாப்' குழுவில், தமிழகம் முழுதும் இருந்து ஆசிரியர்கள் உள்ளனர். இக்குழுவில், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, ரமேஷ் கருத்து பதிவிட்டுள்ளார். இத்தகவல், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநருக்கு தெரியவந்தது. இது குறித்து விசாரிக்க, முதன்மை கல்வி அலுவலருக்கு, இணை இயக்குநர் உத்தரவிட்டார். விசாரணையில், அரசுக்கு எதிராக, ரமேஷ் கருத்து பதிவிட்டது உறுதி செய்யப்பட்டது. நேற்று, அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து, திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி