ஆம்புலன்சில் கடத்திய ரூ.25 லட்சம் கஞ்சா பறிமுதல்
திருவாரூர்:இலங்கைக்கு கடத்த முயன்ற, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, கோவில்வெண்ணி சோதனை சாவடியில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.அப்போது, ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை சோதனை செய்ததில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை ஒரிசாவில் இருந்து, ஆந்திரா வழியாக, இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. ஆம்புலன்சை ஒடிசாவைச் சேர்ந்த நீலகண்டநாயக், 36, என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, மார்சல் டெரான்ஸ் ராஜா என்பவரும் வந்துள்ளார்.விசாரணையில், நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த முனீஷ்வரன், தஞ்சையை சேர்ந்த குமார் ஆகியோர் உதவியுடன், இலங்கைக்கு கஞ்சாவை கடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.நான்கு பேரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம், இரண்டு டூ - வீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.