மேலும் செய்திகள்
பரமக்குடியில் ஆஞ்சநேயர் வீதியுலா
29-Dec-2024
வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா ஆலங்குடி அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில், ஞானபுரி சித்ரகூட ஷேத்திரத்தில் சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி, இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, பதரீ சங்கராச்சார்ய ஸ்ரீ க்ஷேத்ர சகடபுர ஸ்ரீ வித்யபீட ஆச்சார்ய மகா சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் செய்தார். தொடர்ந்து, 100 லிட்டர் பால், 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ கார்யம் நிர்வாகி சந்திரமவுலீஸ்வரன், தர்மாதிகாரி ரமணி அண்ணா ஆகியோர் செய்திருந்தனர்.
29-Dec-2024