மேலும் செய்திகள்
பஸ்சில் கடத்திய ரூ.1.66 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
09-May-2025
பேரளம்:பேரளம் அருகே அரசு பஸ்சில் எடுத்து வரப்பட்ட கணக்கில் வராத, 20 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, கீரனுார் சோதனைச்சாவடியில், பேரளம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, திருவாரூரில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ்சை சோதனை செய்ததில், அதில் வந்த பயணி ஒருவர், கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தாலுகா, கோணலாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முகமது யூனிஸ், 40, என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, 20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், முகமது யூனிஸை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
09-May-2025