உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவனுக்கு கம்பி

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவனுக்கு கம்பி

திருவாரூர்:குடிபோதையில், மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே, ஊட்டியானியை சேர்ந்தவர் ரமேஷ், 55. இவரது மனைவி செல்வி, 50. இவர்களுக்கு, 22, மற்றும், 25 வயதில் இரு மகன்கள் உள்ளனர். ரமேஷ் குடிப்பழக்கம் உள்ளவர். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, குடிபோதையில், மனைவியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த ரமேஷ், மனைவி கழுத்தை நெரித்து தள்ளிவிட்டுள்ளார். மயங்கி விழுந்த செல்வி, அதே இடத்தில் இறந்தார். வடபாதிமங்கலம் போலீசார், செல்வி உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்கு பதிந்து, ரமேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி