உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / அரசு வேலை ஆசைகாட்டி பண மோசடி

அரசு வேலை ஆசைகாட்டி பண மோசடி

திருவாரூர், அக். 10-அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பெண்ணிடம், 8 லட்சம் ரூபாய் பெற்று, மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, குவளைக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி, விஜி, 30. அதே ஊரைச் சேர்ந்தவர் அன்புராஜ், 38. இவர், 2023ல், மன்னார்குடி நகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி, விஜியிடம், 8 லட்சம் ரூபாய் பெற்று, போலி நியமன ஆணை கொடுத்து மோசடி செய்தார். விஜி புகாரின்படி, அன்புராஜ் மீது, பணமோசடி வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் இரவு, அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை