3 வாலிபர்களுக்கு காப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, கடகம்பாடியில் இருந்து, நேற்று முன்தினம், மூன்று மாணவியர் பள்ளி முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சரபோஜிராஜபுரம் டாஸ்மாக் கடைமுன், வடுகக்குடியைச் சேர்ந்த மணிமாறன், 22, அஜய், 19, சந்தோஷ்குமார், 21 ஆகிய மூவரும், சாலையின் நடுவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, வாலிபர்களை, வழியை விட்டு நிற்கும்படி கூறிய, 16 வயது மாணவியை அவர்கள் திட்டி, பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்துள்ளனர். மாணவி புகாரில், பேரளம் போலீசார், மூவரையும் போக்சோவில் கைது செய்தனர்.