உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / போக்சோவில் வாலிபருக்கு 40 ஆண்டு சிறை

போக்சோவில் வாலிபருக்கு 40 ஆண்டு சிறை

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, கோட்டூர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பக்ருதீன்.இவரது மகன் அசார் என்கிற ஜெகபர்சாதிக், 25. இவர், ராயநல்லுாரைச் சேர்ந்த சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, கடந்த 2020ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், சிறுமி கர்ப்பம் அடைந்தார்.இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், திருத்துறைப்பூண்டி மகளிர் போலீசில் புகார் செய்தனர். போக்சோ வழக்கில் அசாரை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று நடந்தது.குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அசாருக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ