உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / ரூ.10 கோடி மதிப்பிலான தியாகராஜர் கோயில் நிலம் மீட்பு

ரூ.10 கோடி மதிப்பிலான தியாகராஜர் கோயில் நிலம் மீட்பு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர். திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான இடம், திருவாரூர் விளமல் அரசு விருந்தினர் மாளிகை அருகில் உள்ளது. இந்த இடம், 78,260 சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில், பல ஆண்டுகளாக, தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வந்தது. இந்த இடத்திற்கு, பகுதி தொகையாக, 1.60 கோடி ரூபாய் அளவிற்கு, தியாகராஜர் கோயிலுக்கு பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக, நாகை, இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இடத்தை மீட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அறநிலையத்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்த உத்தரவிட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில், 78,260 சதுர அடியில், 25,000 சதுரஅடி போதும். மற்ற இடத்தை, அறநிலைய துறையிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த இடத்தை மீட்க, அக்., 15ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று, அறநிலையத்துறை அதிகாரிகள், 53,268 சதுரடி இடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 10 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை