மேலும் செய்திகள்
பெயின்டர் முகத்தை வெட்டி சிதைத்து கொலை
16-Oct-2025
திருவாரூர்: கிண்டல், கேலி பேசிய தகராறில், வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருவாரூர் அருகே புதுார் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் மணிகண்டன், 30; திருமணமாகாதவர். அதே ஊரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 29. இவரை, நேற்று மதியம், மணிகண்டன் கிண்டல் செய்துள்ளார். இதில், வெங்கடேஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நேற்று மாலை, 5:30 மணிக்கு, மணிகண்டன் வீட்டிற்கு, வெங்கடேஷ் சென்றுள்ளார். அங்கு, மணிகண்டன் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, மணிகண்டனை, கட்டையால் தாக்கியதில், அவர், அதே இடத்தில் இறந்தார். இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். திருவாரூர் தாலுகா போலீசார், வெங்கடேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.
16-Oct-2025