உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பஸ் மோதி உப்பளத் தொழிலாளி பலி : இறந்தவரின் கண்ணை தானமாக வழங்க முடிவு

பஸ் மோதி உப்பளத் தொழிலாளி பலி : இறந்தவரின் கண்ணை தானமாக வழங்க முடிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பஸ் மோதி உப்பளத்தொழிலாளி பரிதாபமாக பலியானார். அவரின் கண்களை தானமாக வழங்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் உப்பளத்தொழிலாளி இவர் நேற்று வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிகொண்டிருந்தார். தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் முனியசாமிபுரம் அருகே வரும்போதும் அந்த ரோட்டின் வழியாக வந்த அரசு பஸ் ஒன்று இசக்கிமுத்து மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த இசக்கிமுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.கண்கள் தானம்:இறந்தவரின் கண்களை தானமாக வழங்க இசக்கிமுத்துவின் உறவினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று அவரது கண்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டது.தொடரும் விபத்துக்கள்;விபத்துநடந்த இடத்தில் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் 2 பேர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். இந்தப்பகுதியில் வேகத்தடை அமைக்கவேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். தொடர்ந்து விபத்துக்கள் நடக்காமல் இருக்க பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை