மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் நடுவக்குறிச்சி கோவில்தெருவை சேர்ந்தவர் சிங்கராயர், 37. இவர், தனது குடும்பத்தினருடன் மாருதி சுசூகி ஈகோ காரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்றார். திருமணம் முடிந்ததும், குடும்பத்துடன் சிங்கராயர் நேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.திருநெல்வேலி - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலூரணி விலக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பின்பக்க வலதுபுற டயர் வெடித்ததில் கார் சாலையோரத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.அவர்களை, நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் மீட்டு துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, சிங்கராயரின் 13 வயது மகள் பிலிசிகா உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.துாத்துக்குடி முத்தையாபுரம் சுனாமி காலனி சேர்ந்த மீனவர் முத்துகுமார், 37. இவர், நேற்று டூ வீலரில் முத்தையாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாசரேத்தில் இருந்து துாத்துக்குடி சென்ற அரசு பஸ் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே முத்துகுமார் உயிரிழந்தார். முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025
14-Dec-2025