உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டி அருகே மழைக்காக ஒதுங்கி நின்றவர் மின்னல் தாக்கி பலி

கோவில்பட்டி அருகே மழைக்காக ஒதுங்கி நின்றவர் மின்னல் தாக்கி பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று மாலை பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது நெல்லையில் இருந்து விருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊரணி பட்டியைச் சேர்ந்த ராஜமாணிக்கம்(55) என்பவர் நாலாட்டின்புதூர் பகுதியில் மழைக்காக சாலைப் பகுதியில் உள்ள மரத்தின் கீழ் ஓரமாக நின்று உள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் ராஜமாணிக்கம் பரதாமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

இரா. சந்திரன்
மே 10, 2024 22:04

வருந்தத்தக்க செய்தி துவக்கப்பள்ளியிலேயே மழைக்கு மரத்தின் அடியில் ஒதுங்கக்கூடாதென்று பால பாடம் உண்டு


Ramesh Sargam
மே 10, 2024 20:39

அதான் மின்னல் தாக்கி உயிர் இழந்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள் அப்படி இருக்கையில் யார் மீது வழக்கு தொடுப்பார்கள்?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை