உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரர் திடீர் மாயம்

விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரர் திடீர் மாயம்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துார் அருகே மேலமடம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார், 26. இவர், 2019ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 2023 மார்ச் 24ல் ஹைதராபாத்தில் இருந்து விடுமுறையில் சொந்த ஊர் வந்த அருண்குமார் கடந்த ஆண்டு நவ., 17ல் பணிக்கு சென்றிருக்க வேண்டும்.ஆனால், பணிக்குச் செல்லவில்லை. அருண்குமார் குறித்து அவரது தந்தை கணேசன் பல இடங்களில் விசாரித்துள்ளார். சென்னை வடபழனியில் நவாஸ் என்ற லாட்ஜில் 80 நாட்கள் தங்கி, பணம் கொடுக்காமல் அடையாள அட்டையை மட்டும் கொடுத்துச் சென்றது தெரியவந்தது.போலீசார் கூறுகையில், 'அருண்குமார் ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாய் இழந்துள்ளார். கணேசனுக்கு தெரியாமல் பூர்வீக சொத்து ஒன்றையும் விற்றுள்ளார். மேலும், பலரிடம் கடன் வாங்கியிருப்பது தெரியவந்து உள்ளது. அவரை தொடர்ந்து தேடி வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ