மேலும் செய்திகள்
த.வெ.க., நிர்வாகி செயலால் பரபரப்பு
26-Dec-2025
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
தூத்துக்குடி:தூத்துக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இரவில் பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தூத்துக்குடி சிதம்பரநகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. கடந்த 22ம் தேதி இரவில் கொள்ளையர்கள் நான்கு பேர் வங்கியின் ஷட்டரில் இருந்த நான்கு பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த பெரிய கதவு பூட்டை உடைக்க முயற்சித்தனர். முடியாததால் கிளம்பிச் சென்றனர்.இது குறித்து வங்கியின் முதுநிலை மேலாளர் அனுக்ரஹா, தென்பாகம் போலீசில் புகார் செய்தார். சிசிடிவி காட்சிகளில், கடப்பாறையால் பூட்டுகளை உடைப்பவர்கள் வட மாநில இளைஞர்கள் எனத் தெரிந்தது. விரல் ரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை முயற்சி தோல்வியால் கோடிக்கணக்கான பணம், நகைகள் தப்பின.
26-Dec-2025
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025