உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரி காலில் விழுந்த விவசாயி

சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரி காலில் விழுந்த விவசாயி

துாத்துக்குடி: சிப்காட் அமைக்க நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா, வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, ராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உட்பட கிராம பகுதிகளில் 2,700 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசு சிப்காட் அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சிப்காட் அமைப்பது தொடர்பாக எட்டையபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. சிப்காட் தனி டி.ஆர்.ஓ., ரேவதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், போலீசாரின் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சிப்காட் வேண்டாம் என, ஒருமித்த குரலில் கூறினர். கோரிக்கை மனுவையும் வழங்கினர். அப்போது, விவசாயி ஒருவர் சிப்காட் வேண்டாம் எனக்கூறி டி.ஆர்.ஓ., காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தடுத்த டி.ஆர்.ஓ., ரேவதி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறியதோடு, விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என, உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை