கோவில்பட்டி பஸ் நிலையத்தில் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், தெற்கு சிந்தலக்கட்டை பகுதியை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள், 60. இவரது மனைவி முத்துமாரி, 58. இவர்களது மகன் ராமச்சந்திரன், 37. வேலாயுதபெருமாள் பெயரில் உள்ள 16 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி அவருடைய மகன் ராமச்சந்திரன் கேட்டுள்ளார்.இந்நிலையில், கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் வேலாயுத பெருமாள் நேற்று தனது நண்பர் அந்தோணியுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த முத்துமாரியும், ராமச்சந்திரனும் 16 சென்ட் இடத்தினை எழுதி தரும்படி கேட்டுள்ளனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.திடீரென வேலாயுதபெருமாள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகன் ராமசந்திரனை வெட்டினார். அதை தடுக்க முயன்ற முத்துமாரிக்கும் அரிவால் வெட்டு விழுந்தது. அங்கிருந்தவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.அங்கு சென்ற போலீசார் காயமடைந்த ராமச்சந்திரன், அவரது தாய் முத்துமாரி இருவரையும் மீட்டு சிகிச்சைகாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, வேலாயுத பெருமாள் மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோரை கைது செய்தனர்.