மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு, சிப்காட் பகுதி கிடங்கில் இருந்து மதுபான பாட்டில்கள், பெட்டிகளில் வைத்து லாரிகளில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.இந்நிலையில், ஜூன் 24ல் துாத்துக்குடி சிவந்தாகுளம் டாஸ்மாக் அரசு மதுபான கடைக்கு, கிடங்கில் இருந்து லாரியில் எடுத்து வரப்பட்டன.அந்த பெட்டிகளை லோடுமேன்கள் கடைக்குள் இறக்கிக் கொண்டிருந்தனர். அதுவரை அங்கு காத்திருந்த இரு வாலிபர்கள் திடீரென லோடுமேன்களை மிரட்டி, ஒரு பெட்டி பீர் பாட்டிலை அபேஸ் செய்து தப்பினர்.டாஸ்மாக் ஊழியர்கள் விரட்டிச் சென்றபோதிலும் அவர்களை பிடிக்க முடியவில்லை. போலீசாருடன், டாஸ்மாக் ஊழியர்களும் தேடி வருகின்றனர். இருப்பினும், இதுவரை காவல் நிலையத்தில் புகார் ஏதும் செய்யப்படவில்லை.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025