மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:குபேர பவுர்ணமியை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு முழுதும் குறிப்பிட்ட சில நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு மாலையில் நடப்பது வழக்கம். ஆனால், குபேர பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டதால், நேற்று மாலை முதலே பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு கடற்கரையில் இடம்பிடித்தனர்.கூட்ட நெரிசல் காரணமாக, தங்கத்தேர் புறப்பாடு திடீரென ரத்து செய்யப்பட்டது. சுவாமி ஜெயந்திநாதர் - வள்ளி-, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளியதும் தீபாராதனை மட்டும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தங்கத்தேர் இழுப்பதற்காக நேற்று மட்டும், 19 பேர் கோவில் நிர்வாகத்திடம் பணம் செலுத்தி இருந்தனர். அந்த பக்தர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின் அவர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.கடந்த சில மாதங்களாகவே பவுர்ணமி தோறும் கோவில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் ஆயிரகணக்கான வாகனங்களில் வந்து நேற்று திருச்செந்துாரில் குவிந்தனர்.கோவில் அருகே பெருந்திட்ட வளாகப் பணிகள் நடப்பதால் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதி இல்லாமல் திணறி வருகின்றனர். 'வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஊருக்கு வெளிப்பகுதியில் நிரந்தரமாக வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்' என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025