உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கடல் 60 அடி உள்வாங்கியது

திருச்செந்துார் கடல் 60 அடி உள்வாங்கியது

துாத்துக்குடி: திருச்செந்துாரில் நேற்று அமாவாசையையொட்டி கடல் நீர் 60 அடி துாரம் உள்வாங்கி காணப்பட்டது. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோயில் முன் கடல் நீர் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் உள்வாங்கி காணப்படுவது வழக்கம். நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி காலை முதல் கடல் நீர் சுமார் 60 அடி துாரத்துக்கு உள்வாங்கி காணப்பட்டது. திருச்செந்துார் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து வைகுண்டர் கோயில் வரை கடல் நீர் உள்வாங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை