பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியாயினர்.நாசரேத் அருகே வெள்ளமடத்தையடுத்த குறிப்பன்குளத்தில் சிவசக்தி பட்டாசு ஆலை உள்ளது. நேற்று மாலை அங்கு பணி நடந்து கொண்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் அரசர்குளம் கண்ணன் 21, கமுதி விஜய் 24, சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலத்த காயமடைந்த செல்வம், பிரசாந்த், செந்துார்கனி, முத்துமாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.நாசரேத் போலீசார் விசாரித்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.