கோவில்பட்டியில் 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, வெள்ளாலங்கோட்டை என்ற இடத்தில், ஒரு லாரியை வருவாய் துறையினர் நேற்று தடுத்து நிறுத்தினர். டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதிகாரிகள் குழுவினர் லாரியில் சோதனை செய்த போது, 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.