தாயுடன் பூசாரி தனிக்குடித்தனம் கொன்ற 17 வயது மகன் கைது
தாளமுத்துநகர்:துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சொக்கபழங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 40. துாத்துக்குடி மூன்றாம் மைல் பகுதியில் கோவில் பூசாரி. சில ஆண்டுகளுக்கு முன் மங்களகுறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி முத்துவிஜயா என்ற பெண்ணுடன், பூசாரி ரவிக்கு பழக்கம் ஏற்பட்டது. மூன்று குழந்தைக்கு தாயான முத்துவிஜயா, ஆறு மாதங்களுக்கு முன், தன் இரு பெண் குழந்தைகளுடன் சண்முகபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, ரவியுடன் தங்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3hhnoqnu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று முன்தினம் இரவு, சோட்டையன்தோப்பு என்ற இடத்தில், ரவி நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த இருவர், அவரை அரிவாளால் வெட்டி, கொலை செய்து தப்பினர். தாளமுத்துநகர் போலீசார், தலைமறைவாக இருந்த முத்து விஜயாவின் மூத்த மகனான, 17 வயது சிறுவன், அவரது உறவினர் பால்பாண்டி, 26, ஆகியோரை, நேற்று அதிகாலை கைது செய்தனர்.