உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 8 வயது சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு 20 ஆண்டு

8 வயது சிறுமிக்கு தொல்லை முதியவருக்கு 20 ஆண்டு

துாத்துக்குடி:எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.துாத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை, வி. கழுகாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த மணி, 61, என்பவர் 2022ல் அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். வழக்குப் பதிவு செய்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.வழக்கின் விசாரணை துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சுரேஷ் குற்றம்சாட்டப்பட்ட முதியவர் மணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Surianarayanan Subramanian
பிப் 20, 2025 14:10

இந்த செய்தி இன்றைய தினமலர் நெல்லை பதிப்பில் டி8 பக்கத்தில் பத்தி 6, 7, 8 இல் ஒரு தலைப்பிலும், அதே பக்கத்தில் பத்தி 4, 5 இல் வேறொரு தலைப்பிலும் இருமுறை வெளியாகியுள்ளது. இந்த தவறுகளை வரும் காலம்களில் சீர் செய்யவும். பத்தி 6,7,8 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தலைப்புக்கு உள்ளே போதையில் நீதிபதியின் காரை மறித்தவர் பற்றிய செய்தி இல்லை. இவண், தங்கள் நலம்விரும்பி முனைவர். சு. சூரியனராயணன், அம்பாசமுத்ரம், 9443081086


நைனாநாயுடு
பிப் 20, 2025 11:20

நைனா.. நைனா.. சீக்கிரம் வெளியே வந்துருவே நைனா.


புதிய வீடியோ