உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 2,000 கிலோ பீடி இலை துாத்துக்குடியில் பறிமுதல்

2,000 கிலோ பீடி இலை துாத்துக்குடியில் பறிமுதல்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டி கடற்கரை அருகே புதுார்பாண்டியாபுரம் காமாட்சியம்மன் கிடங்கு பகுதியில் தருவைகுளம் மரைன் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு, 31 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த, 2,000 கிலோ பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், '60 கிலோ எடை கொண்ட மூட்டையில் 31 பீடி இலை பண்டல்கள் இருந்தது. கிடங்கை முழுமையாக சோதனை செய்ததில் கடல் மார்க்கமாக படகு வாயிலாக சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றின் இலங்கை மதிப்பு சுமார் 30 லட்சம். இதுதொடர்பாக, சோபன், 38, விஜி, 43, சரவணக்குமார், 44, ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை