உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / உப்பு கம்பெனியில் கஞ்சா செடி பீகார் வாலிபர்கள் 4 பேர் கைது

உப்பு கம்பெனியில் கஞ்சா செடி பீகார் வாலிபர்கள் 4 பேர் கைது

தூத்துக்குடி:தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் உப்பு கம்பெனி உள்ளது. அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் நான்கு பேர் தங்கள் வசிக்கும் பகுதியில் கஞ்சா செடி வளர்த்துள்ளனர்.போலீஸ் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் பீகார் மாநிலம் பரியப்பூரைச் சேர்ந்த மனிஷ்சாக் 28, முனைனா திவான் 29, சதீஷ்குமார் 19, பிஜியலி பஸ்வான் 29, என தெரிந்தது. அவர்களிடமிருந்து 80 கிராம் கஞ்சா, கஞ்சா புகைக்கும் 2 பைப்கள், 40 பாக்கெட் போதை புகையிலை மற்றும் 4 அலைபேசிகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை