உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.12 கோடி போதைப்பொருள் பறிமுதல் துணை ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது

ரூ.12 கோடி போதைப்பொருள் பறிமுதல் துணை ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடியில், 12 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் தொடர்பாக, தொழிலக பாதுகாப்பு படை வீரர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அதிகாரிகள் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, ஒரு பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில், கேரளாவில் இருந்து எடுத்து வந்த 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.அந்த பொருட்களை மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உதவியோடு, தோணி மூலம் வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரிந்தது.இதுதொடர்பாக, பைக்கில் வந்த துாத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த சுதாகர், 34, ஜேசுராஜா, 36, மற்றும் அவர்கள் கொடுத்த தகவலின்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து, 31, தோணி மாலுமி கிங்ஸ்லி, 48, ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் ஹசீஸ் என அழைக்கப்படும், செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் ஆகும். ஐரோப்பிய நாடுகளில் இந்த வகை போதைப் பொருட்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்பதால், மொரீஷியஸ் நாடு வழியாக கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.ஹசீஸ் வகை போதைப்பொருள், 1 கிலோ ௧ கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ஒரு கிலோ இரண்டரை கோடி ரூபாய். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை