ஊழியருக்கு இருக்கை தராத 45 நிறுவனங்கள்
துாத்துக்குடி: தமிழகத்தில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. துாத்துக்குடியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில், அதிகாரிகள் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, 45 கடைகள் மற்றும் நிறுவனங்களில், ஊழியர்கள் அமர இருக்கைகள் வழங்கப்படாதது தெரிந்தது.இதையடுத்து, அந்த கடை உரிமையாளர் மற்றும் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.