உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மேம்பாலம் கோரி போராட்டம் 50 பேர் கைது

மேம்பாலம் கோரி போராட்டம் 50 பேர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரயில் நிலையம், திருநெல்வேலி -- திருச்செந்துார் ரயில் பாதையில் அமைந்துஉள்ளது. அதற்கான ரயில்வே கேட், திருச்செந்துாரில் இருந்து துாத்துக்குடி செல்லும் பிரதான சாலையில் உள்ளது.ரயில்கள் வரும் சமயங்களில் இந்த ரயில்வே கேட் மூடப்படுவதால், 15 நிமிடங்களுக்கு மேலாக, இரு புறமும் வாகனங்கள் 1 கி.மீ., அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. அப்பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்; திருச்செந்துார், ஆறுமுகநேரி ரயில் நிலையங்களை மேம்படுத்த வலியுறுத்தி, நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சிக் குழு தலைவர் தங்கமணி, வணிகர்கள் சங்க மாநில தலைவர் காமராஜ் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தபால் நிலையம் முன் திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாகச் சென்ற அவர்கள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, பின் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி