உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துாரில் கடற்கரை பாதிப்பு துாண்டில் வளைவு அவசிய தேவை

திருச்செந்துாரில் கடற்கரை பாதிப்பு துாண்டில் வளைவு அவசிய தேவை

திருச்செந்துார்:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன், கடல் அலைகளின் ஆக்ரோஷத்தால் கடற்கரை மண் அரிக்கப்பட்டு, கடற்கரையின் அகலம் குறைந்து வருகிறது. இதனால், கடலில் குளிக்கும் பக்தர்கள் திடீர் ஆழத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது.கடற்கரை பகுதியில் அமைக்கப்படும் துாண்டில் பாலம், துாண்டில் வளைவு போன்றவற்றால் கடல் அலைகளின் வேகம், பக்கத்து பகுதிகளுக்கு மாறி கடல் அரிப்பு அதிகமாகி விடுகிறது.திருநெல்வேலி மாவட்டம், உவரி பகுதியில் அமைக்கப்பட்ட துாண்டில் வளைவுகளால், கூட்டப்பனையில் கடற்கரை மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், கடற்கரையில் இருந்த மீன் வலைக்கூடம் போன்றவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.திருச்செந்துார் கடற்கரை தென்பகுதியில், அய்யா கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துாண்டில் பாலத்தால், அங்கு அலையின் வேகம் குறைந்து, திருச்செந்துார் கோவில் பகுதியில் கடல் அலை ஆக்ரோஷத்தால் கடற்கரை மண்ணரிப்பு அதிகரித்துள்ளது.திருச்செந்துாரில் கோவில் முன் கடற்கரை அகலம் முன்பை விட குறைந்துவிட்டது. இதனால், பக்தர்கள் குளிக்கும் இடங்களில் ஆழம் ஏற்பட்டு, கற்கள் பாறைகளில் சிக்கி காயப்படுகின்றனர். தமிழக அரசு கடல் அரிப்பை தடுக்க, திருச்செந்துார் கோவில் பகுதியில் துாண்டில் வளைவு அமைக்க முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ