உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அனல் மின் நிலையத்தில் விபத்து: மூவருக்கு தீக்காயம்

அனல் மின் நிலையத்தில் விபத்து: மூவருக்கு தீக்காயம்

துாத்துக்குடி : துாத்துக்குடி அருகே தருவைகுளம் மேலமருதுார் பகுதியில், 'மோக்சி பவர் ஜெனரேஷன் லிமிடெட்' என்ற தனியார் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை எடுத்துச் செல்லும் குழாயில் இருந்து திடீரென தீ வெளியேறியது. இதனால், எப்போதும்வென்றான் ஆறுமுககனி, 32, கருங்குளம் சங்கரசுப்பு, 41, துாத்துக்குடி அன்புராஜ், 36, ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனே, அவர்கள் துாத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தருவைகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை