உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மாணவியர் விடுதி முன் தகராறு; இரு சிறுவர்கள் அதிரடி கைது

மாணவியர் விடுதி முன் தகராறு; இரு சிறுவர்கள் அதிரடி கைது

கழுகுமலை : துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே குமாரபுரத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, சுமார் 35 மாணவியர் தங்கி பள்ளிகளில் படிக்கின்றனர். கடந்த 29ம் தேதி இரவு டூ - வீலரில் வந்த இரண்டு வாலிபர்கள் விடுதி முன் நின்றபடி அங்குள்ள சுற்றுச்சுவரில் சிறுநீர் கழித்தனர்.இதைப் பார்த்த விடுதி சமையலரான மாடத்தி அவர்களை திட்டினார். அவருடன் தகராறு செய்த இருவரும், விடுதிக்குள் இருந்த மாணவியரை பார்த்து ஆபாசமாக கையசைத்துள்ளனர். தட்டிக்கேட்ட மாடத்தியை அவதுாறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து மாடத்தி புகாரின்படி, கழுகுமலை போலீசார், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவரை கைது செய்து, கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின், இருவரும், நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை