உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவை பெண்ணின் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு

கோவை பெண்ணின் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு

துாத்துக்குடி:கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி, 50, என்பவரின் மகளிர் உரிமைத்தொகை, இரண்டு ஆண்டுகளாக உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த சாந்திதேவி என்ற பெண்ணின் வங்கி கணக்கிற்கு சென்றது தெரியவந்தது. இது குறித்து, மகேஸ்வரி பொள்ளாச்சி சப் -- கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இது தொடர்பான செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானது. இப்பிரச்னை குறித்து தமிழக சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது: மகேஸ்வரி, விண்ணப்பத்தில் வங்கி கணக்கை எழுதிய போது யாரோ தவறு செய்துள்ளனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணின் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தான் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். முன்னரே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து சரி செய்திருக்கலாம். அந்த பெண்ணின் மொபைல் போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. ஆனால், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என, அவர் தெரிவித்திருக்கலாம். தற்போது தான் அவர் புகார் அளித்தார். விரைவில் வங்கி கணக்கு விபரம் சரி செய்யப்பட்டு, அவருக்கு பணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை