உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / போதையில் ஏட்டு ரகளை: இன்ஸ்.,சை தாக்க முயற்சி

போதையில் ஏட்டு ரகளை: இன்ஸ்.,சை தாக்க முயற்சி

துாத்துக்குடி: குடிபோதையில் போலீஸ் ஸ்டேஷனில் ரகளையில் ஈடுபட்ட ஏட்டு, இன்ஸ்பெக்டரையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக நயினார், 42; ஓட்டப்பிடாரம் போலீஸ் ஏட்டு. நேற்று காலை, சீருடை அணியாமல் ஆறுமுகநயினார் போதையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு, இன்ஸ்பெக்டர் பால் யேசுதாசிடம், விடுப்பு கேட்டு தகராறு செய்தார். அப்போது, இன்ஸ்பெக்டரை அவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பின், அங்கிருந்து சென்ற ஆறுமுகநயினார், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி, துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். திடீரென அங்கிருந்தும் தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக, மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், ஆறுமுக நயினாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின் ஆறுமுகநயினார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை