உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பள்ளத்தில் பாய்ந்த பஸ்: 46 பயணியர் தப்பினர்

பள்ளத்தில் பாய்ந்த பஸ்: 46 பயணியர் தப்பினர்

துாத்துக்குடி:ஆக்ஸில் கட் ஆனதால், திடீரென அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம், மேல செல்லுாரை சேர்ந்த செல்வதுரை, 39, ஓட்டுநராகவும், கொத்தங்குளத்தை சேர்ந்த செல்லதுரை, 57, நடத்துநராகவும் இருந்தனர். பஸ்சில், 46 பயணியர் இருந்தனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் - காலங்கரைபட்டி இடையே சென்ற போது, திடீ ரென முன்பகுதி ஆக்ஸில் துண்டானதால், நிலை தடுமாறிய பஸ் சாலையோரத்தில் இருந்த உப்பு ஓடை பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள் ளானது. ஓட்டுநர் செல்வதுரை சாமர்த்தியமாக செயல்பட்டதால் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதாமல், பஸ் பள்ளத்தில் சரிந்து நின்றது. பஸ்சில் இருந்த 46 பயணியரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கழுகுமலை போலீ சார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை